2 கோடி பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

2 கோடி பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

2 கோடி பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!


சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் மத்திய பிரதேச சுகாதார அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சுப்பிரமணியன், “தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி வருகிறது.

கோவை, சேலம், திருப்பூர் 117 மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்களிடம் ஆலோசனை நடைபெற்றது.17 லட்சம் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனை வழங்கப்பட்டுள்ள நிலையில் 4 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. எனவே மீதி உள்ள 13 லட்சம் தடுப்பூசிகள் வாங்கி பொதுமக்களுக்கு செலுத்தப்படும்.

பொதுமக்கள், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டவில்லை, இதன்காரணமாக தனியார் மருத்துவமனைகள் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் இலவசமாக தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்று கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு இன்னும் 10 கோடி டோஸ் தேவை, 5 லட்சத்து 42 ஆயிரம் தடுப்பூசிகள் இன்று மாலை வரவுள்ளது. இதனால் அடுத்து 3 தினங்களுக்கு தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது. மேலும் 5 லட்ச தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் ஒன்றிய அரசு அனுப்பும்.

தமிழகத்தில் ஒருவர் கூட ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை. ஒப்பந்த அடிப்படையில் 30 ஆயிரம் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டவர்களின் பணிக்காலம் டிசம்பர் வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் தேவைப்படுபவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்” என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad