3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 18, 2021

3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் மேலும் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து,
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை நூற்றுக் கணக்கான அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று மேலும், 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நில நிர்வாகத் துறை கூடுதல் ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி, மீன்வளத் துறை ஆணையர் மற்றும் மேலாண் இயக்குனராகவும், மீன்வளத் துறை ஆணையர் மற்றும் மேலாண் இயக்குனராக இருந்த கருணாகரண், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராகவும், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் பதவி வகித்த அதுல் ஆனந்த், தொழிலாளர் நல ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனர் சரவணனுக்கு, கூடுதலாக, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad