இனிமே 3 வருஷம் தான்; நியாய விலைக் கடைகளுக்கு புதிய உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

இனிமே 3 வருஷம் தான்; நியாய விலைக் கடைகளுக்கு புதிய உத்தரவு!

இனிமே 3 வருஷம் தான்; நியாய விலைக் கடைகளுக்கு புதிய உத்தரவு!


தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 35 ஆயிரம் நியாய விலைக்கடைகள் மூலம் 1.96 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என ஐந்து வகையான குறியீடுகள் கொண்ட குடும்ப அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு அரிசி, கோதுமை ஆகியவை இலவசமாகவும், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் விநியோகம் செய்யப்படுகின்றன.
தற்போது குடும்ப அட்டைகள் அனைத்தும் நவீனமயமாகி விட்ட சூழலில் ஸ்மார்ட் கார்டுகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதற்காக அனைத்து நியாய விலைக்கடைகளிலும் இணைய வழி சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது கைரேகை மூலம் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பான விவரங்கள் வாடிக்கையாளர்களது கணக்கில் பதிவு செய்யப்பட்டு விடும்.
இந்நிலையில் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சுற்றறிக்கை ஒன்றை நேற்று அனுப்பியுள்ளார். அதில், நியாய விலைக்கடை ஊழியர்கள் ஒரே கடையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. அப்படியிருந்தால் அவர்களை அருகிள் உள்ள நியாய விலைக்கடைகளுக்கு பணியிடமாற்றம் செய்ய வேண்டும்.

விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை

நியாய விலைக்கடைகளில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தவிர வெளிநபர்கள் யாரும் இருக்கக் கூடாது. இதுபற்றி புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடை விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது நியாய விலைக்கடை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நியாய விலைக்கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இவர்கள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad