மாணவர்கள் ருத்ராட்சம் அணிவதன் அவசியம் என்ன? - நான்கு முக ருத்ராட்ச மகிமை தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

மாணவர்கள் ருத்ராட்சம் அணிவதன் அவசியம் என்ன? - நான்கு முக ருத்ராட்ச மகிமை தெரியுமா?

மாணவர்கள் ருத்ராட்சம் அணிவதன் அவசியம் என்ன? - நான்கு முக ருத்ராட்ச மகிமை தெரியுமா?


ருத்ராட்சம் பற்றி பல ஆன்மிக மற்றூம் தெய்வீக சக்திகள், மருத்துவ குணங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. ருத்ராட்சம் சிவபெருமானின் கண்ணீரிலிருந்து தோன்றியது என்று நம்பப்படுகிறது. ருத்ராட்சத்தில் பல வகைகள் உள்ளன. மாணவர்கள் ருத்ராட்சம் அணிவதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம். இருப்பினும் எந்த வகை ருத்ராட்சம் யார் அணிய வேண்டும் என்பது முக்கியமானது.


ஒரு மாணவன் கெளரி சங்கர் வகை ருத்ராட்சம் அணியக்கூடியது. இந்த ருத்ராட்சம் திருமண வாழ்வில் உள்ள சிக்கல்களை நீக்கக்கூடியது. மாணவர்கள் நான்கு முக ருத்ராட்சத்தை அணிதல் சிறந்ததாக கருதப்படுகிறது.நான்கு முக ருத்ராட்சம் நான்முகனான பிரம்மனைக் குறிப்பதாகும். இதை அணிவதன் மூலம் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியின் அருள் சிறப்பாக கிடைக்கும் என நம்பப்படுகிறது.

நான்கு முக ருத்ராட்சம் மாணவர்கள் அணிவதால் மனமும், சிந்தனையும் ஒருநிலைப் படும். மாணவர்களுக்குப் படிப்பு ஏற இதுதான் மிக முக்கியமானதாகும். எந்தவொரு தேர்விலும் வெற்றிபெற இது அவசியமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் தேர்வில் வெற்றி பெற வழிவகுக்கும் என கூறப்படுகிறது.நான்கு முக ருத்ராட்ச (சதுர்முக) அணிவதால் மாணவர்களின் மனம் ஒருமுகப்படும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருக்கும் கலக்கம் நீங்குவதோடு, உங்களின் பேச்சு, செயலில் நிதானம் கிடைக்கும். மென்மையும், இனிமையான விஷயங்களில் ஈடுபடுவர்.

ஆன்மீக பாதையில் செல்வோரும் நான்கு முக ருத்ராட்சமும் அணிவது புனிதமானதாகவும், ஆன்மீகத்தில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
இந்த ருத்ராட்சத்தை அணிவதன் மூலம், விபச்சாரம் செய்பவர்கள் கூட பிரம்மச்சாரிகளாகவும், நாத்திகர்களும் இறை பக்தி கொண்டவர்களாக மாறுகிறார்கள். இந்த ருத்ராட்சம் மன அமைதியையும், ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தையும் தருகிறது.
ஜோதிட ரீதியாக ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம் மற்றும் குபம் ஆகிய ராசிகளுக்கு பல மடங்கு பலன் தரும் என கருதப்படுகிறது.

மறுபுறம், கல்வி சார்ந்த தொழில், ஆராய்ச்சிப் பணிகளைச் செய்கிறவர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடையவர்கள், இந்த ருத்ராட்சத்தை அணிவதன் மூலமும் அவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். சதுர்முகி ருத்ராட்சத்தை அணிந்துகொண்டு எதிர்மறை நீங்கும். இந்த ருத்ராட்சத்தின் பிரதிநிதித்துவ கிரகம் புதன் ஆகும். புதன் வணிகத்தின் காரண கிரகமாக கருதப்படுகிறது, எனவே நான்கு முக ருத்ராட்சா வணிகர்களுக்கும் நன்மை பயக்கும்.நான்கு முக ருத்ராட்சம் திங்கட்கிழமை காலையில் குளித்த பின் வடக்கு நோக்கி நின்று அணிய வேண்டும்.

ருத்ராட்சத்தை அணிவதற்கு மும் அதை கங்கை நீர், பசுவின் பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து புனிதப்படுத்தப்பட வேண்டும். அணிவதற்கு முன், சிவபெருமனை தியானித்து, ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad