கொரோனா நிவாரன நிதியாக வந்த 3 அரை பவுன் தங்கத்தை விருதுநகர் ஆட்சியர் திருப்பி கொடுத்த நெகிழ்ச்சி கதை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

கொரோனா நிவாரன நிதியாக வந்த 3 அரை பவுன் தங்கத்தை விருதுநகர் ஆட்சியர் திருப்பி கொடுத்த நெகிழ்ச்சி கதை!

கொரோனா நிவாரன நிதியாக வந்த 3 அரை பவுன் தங்கத்தை விருதுநகர் ஆட்சியர் திருப்பி கொடுத்த நெகிழ்ச்சி கதை!



பொதுமக்கள் தாமாக முன் வாந்து கொரோனா நிவாரணநிதி வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று பல்வேறு தரப்பினர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர்.
இந்த சூழலில் ராஜபாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை கவிதா தனது மகன் மணிஷ்விஸ்வாஸ் உடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியை சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்க வந்தார்.

அப்போது அந்த பெண் தன்னிடமுள்ள மூன்றரை பவுன் தங்க நகையை கொரோனா நிவாரண நிதியாக பெற்றுக்கொள்ளும்படி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். கவிதாவின் செயலை பார்த்து ஆட்சியர் மேகநாதரெட்டி கவிதாவிடம் தங்க நகையை எதற்காக நிவாரணமாக வழங்குகிறீர்கள் என கேட்டார்.

அதற்கு கவிதா, “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனது கணவர் விபத்தில் இறந்த விட்டார். நான் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவரோடு வாழ்ந்து வாருகிறேன். மக்கள் நலனுக்காக இதை வழங்குகிறேன்” என்றார்.இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அந்த நகையை கவிதாவிடம் திரும்ப வழங்கியதோடு ஆதரவில்லாமல் மகனுடன் வாழ்ந்து வரும் நிலையில் சேமிப்பாக அதை வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

இதையடுத்து மேகநாதரெட்டி திருக்குறள் புத்தகம் ஒன்றை கவிதாவிற்கு பரிசாக அளித்தார். தான் சிரமப்பட்டாலும் பொதுமக்கள் நலனுக்காக தனது நகையை வழங்க முன் வந்த கவிதாவிற்கு அரசு வேலைக்கு பரிந்துரை செய்வதாகவும் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உறுதி அளித்தார்.

அதேபோல் அவரது கவிதாவின் மகன் கல்வி முடிக்கும் வரை அனைத்து செலவையும் அரசே ஏற்கும் வகையில் ஏற்பாடு செய்தாகவும் கவிதாவிடம் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad