விருதுநகர் மணம் திருட்டு சம்பவ இடத்திற்கு அதிரடியாக சென்ற வட்டாட்சியர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

விருதுநகர் மணம் திருட்டு சம்பவ இடத்திற்கு அதிரடியாக சென்ற வட்டாட்சியர்!

விருதுநகர் மணம் திருட்டு சம்பவ இடத்திற்கு அதிரடியாக சென்ற வட்டாட்சியர்!


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே புத்தூர் பெரியமுல்லை கண்மாய் பகுதியில் மண் மற்றும் மணல் அள்ளுவதாக ரகசிய தகவல் வட்டாட்சியர் ராமச்சந்திரனின் கிடைத்தது.
அதன் அடிப்படையில் வட்டாச்சியர் ராமசந்திரன் வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அனுமதியின்றி சரளை மண் அள்ளிய
ஜேசிபி மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்து தளவாய்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சோழபுரம் வருவாய் ஆய்வாளர் அமிர்தராஜ் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வட்டாச்சியர் வருவதை அறிந்த மண் கொள்ளையர்கள் டிராக்டர்மற்றும் ஜேசிபி வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மண் மற்றும் மணல் அள்ளியவர்கள் யார் ஜேசிபி வாகனம் யாருக்கு சொந்தமானது என்று குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது .மேலும் தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்


No comments:

Post a Comment

Post Top Ad