கோவில்களின் 5 கி.மீ., சுற்றளவில் மாட்டிறைச்சி விற்க தடை - மீறினால் 3 ஆண்டுகள் சிறை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

கோவில்களின் 5 கி.மீ., சுற்றளவில் மாட்டிறைச்சி விற்க தடை - மீறினால் 3 ஆண்டுகள் சிறை

கோவில்களின் 5 கி.மீ., சுற்றளவில் மாட்டிறைச்சி விற்க தடை - மீறினால் 3 ஆண்டுகள் சிறை



அசாம் மாநிலத்தில், கோயில்களின் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனை செய்யவோ, வாங்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறினால், 3 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலமான அசாமில், முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க., ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான புதிய மசோதாவில் இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் கால்நடைகளை கொல்வது மற்றும் மாட்டிறைச்சி விற்பனை செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது.

மேலும், புதிய மசோதாவில், ஒரு கோயிலின் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய மற்றும் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. முறையான ஆவணங்கள் இன்றி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கு வெளியேயும் கால்நடைகளை கொண்டு செல்வது சட்ட விரோதம் என, கூறப்பட்டு உள்ளது.



இந்த புதிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமின் வழங்கப்படாது. இந்த குற்றத்திற்கு 3 வருடம் சிறை தண்டனை அல்லது 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் அல்லது இரண்டிற்கும் இடையில் வேறுபடக்கூடிய அபராதம் விதிக்கப்படும். புதிய சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற ஒருவர் 2வது முறையாக அதே குற்றத்தைச் செய்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், தண்டனை இரண்டு மடங்காகும்.

இந்த சட்டம் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும். மேலும் 'கால்நடைகள்' என்றால் காளைகள், மாடுகள், பசு, கன்றுகள், ஆண் மற்றும் பெண் எருமைகள் மற்றும் எருமை கன்றுகளுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad