டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா - பங்கேற்கும் முக்கிய பிரபலம் இவர் தான்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா - பங்கேற்கும் முக்கிய பிரபலம் இவர் தான்!

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா - பங்கேற்கும் முக்கிய பிரபலம் இவர் தான்!


டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில், அமெரிக்க நாட்டின் முதல் பெண்மணி ஜில் பைடன் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் பங்கேற்க தகுதி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டோக்கியோ செல்ல தயாராகி வருகின்றனர்.

டோக்கியோவில், வரும் 23-ம் தேதி தொடக்க விழா நடைபெறும். இந்த விழாவில், வீரர் - வீராங்கனைகள் தங்களுடைய நாட்டின் கொடிகளை ஏந்தி அணிவகுத்துச் செல்வார்கள். முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.


அதன்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணி என அழைக்கப்படுபவருமான ஜில் பைடன், டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் செல்வார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad