கேரளாவுக்கு இப்படி ஒரு எச்சரிக்கை: 6 மாவட்டங்கள் உஷார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

கேரளாவுக்கு இப்படி ஒரு எச்சரிக்கை: 6 மாவட்டங்கள் உஷார்!

கேரளாவுக்கு இப்படி ஒரு எச்சரிக்கை: 6 மாவட்டங்கள் உஷார்!


கேரளாவில் இன்று முதல் நாளை மறுநாள் வரை ஆறு மாவட்டங்களில் பலத்த மழைக்கான முன்னெச்சரிக்கை 'யெல்லோ அலர்ட்' வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
 ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை முதல் இரண்டரை வாரங்கள் நல்ல மழைப் பொழிவை கொடுத்தது. ஜூன் 19ஆம் தேதிக்குப் பின் திடீரென குறைந்த மழை, அப்படியே காணாமல் போனது.

மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ராஜீவன் வெளியிட்ட அறிக்கையில், “தெற்கு, மேற்கு கடற்கரை மற்றும் கிழக்கு மத்திய இந்தியாவில் மழை பொழிவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. ஜூலை 12ஆம் தேதி வங்க கடலில் காற்றழுத்த மாறுபாட்டிற்கான அறிகுறிகள் தெரிகின்றன. தென்மேற்கு பருவமழை இந்த வருடம் இன்னும் டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மேற்கு ராஜஸ்தான் மாநிலங்களை அடையவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

தென்மேற்கு பருவமழையின் இடையே விழுந்த இடைவெளி காரணமாக பல மாநிலங்களில் 2 முதல் 3 வாரம் தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இந்த நிலையில் நேற்று கேரளாவில் இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு 'யெல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டது.
அதேபோல் இன்று (ஜூலை 6) முதல் நாளை மறுநாள் (ஜூலை 8) வரை இடுக்கி, பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கான 'யெல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

இடி,மின்னலுடன் பலத்த மழையும் 30 முதல் 40 கி.மீ., வரை காற்று வீசவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

No comments:

Post a Comment

Post Top Ad