சினிமா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்: திரையரங்குகள் திறக்க அனுமதி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

சினிமா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்: திரையரங்குகள் திறக்க அனுமதி!

சினிமா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்: திரையரங்குகள் திறக்க அனுமதி!

கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் பாதிப்புகளையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. பிற நாடுகளில் மூன்றாவது அலை வேகமெடுக்கும் நிலையில் இந்தியாவில் தற்போது இரண்டாம் அலை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பாதிப்புகள் குறைந்து வருகின்றன.

இதனால் பல மாநிலங்கள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. தமிழ்நாட்டில் நேற்று முதல் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. ஆந்திராவில் கிட்டதட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் ஆந்திர மாநில அரசு திரையரங்குகளைத் திறக்க அனுமதியளித்துள்ளது.

ஜூலை 8ஆம் தேதி முதல் 50% இருக்கைகளை மட்டும் நிரப்பி திரையரங்குகள் இயங்கலாம் என ஆந்திர மாநில அரசு கூறியுள்ளது. காலை 10 முதல் இரவு 9 மணி வரை திரையரங்குகளில் காட்சிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனையடுத்து அதற்கான முன்னேற்பாடுகளில் திரையரங்க உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திர மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் இதை பின்பற்றி தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் திரையரங்குகளுக்கு அனுமதியளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்பட படப்பிடிப்புகளுக்கு ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டாலும் பணிகள் நிறைவடைந்த திரைப்படங்களை வெளியிடமுடியாமல் தயாரிப்பாளர்கள் திணறி வருகின்றனர். இதனால் பலர் கடனில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளை நம்பியிருக்கும் ஊழியர்களும் வாழ்வாதரம் இழந்து தவித்து வருகின்றனர். எனவே பிற மாநிலங்களிலும் திரையரங்குகளை திறக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன.


No comments:

Post a Comment

Post Top Ad