மீண்டும் போட்டாச்சு பெரிய லாக்டவுன்; ஆட்டத்தை கலைக்கும் டெல்டா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

மீண்டும் போட்டாச்சு பெரிய லாக்டவுன்; ஆட்டத்தை கலைக்கும் டெல்டா!

மீண்டும் போட்டாச்சு பெரிய லாக்டவுன்; ஆட்டத்தை கலைக்கும் டெல்டா!


மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் கடந்த ஓராண்டாக கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. முதல் அலை, இரண்டாவது அலை என நான்காவது அலை வரை ஆட்டம் காட்டி விட்டது. இந்நிலையில் ஈரான் நாட்டில் ஐந்தாவது அலை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி எச்சரித்துள்ளார்.

ஏனெனில் கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஜூன் மாதத்தின் மத்திய நாட்களை ஒப்பிடுகையில் தற்போது இரண்டு மடங்கு பாதிப்புகள் காணப்படுகின்றன. இதன் பின்னணியில் இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸின் தாக்கம் காரணமாக இருக்கிறது. மேலும் தடுப்பூசி பயன்பாட்டை முடுக்கி விடாமல் அலட்சியம் காட்டியதும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

மொத்தம் 84 மில்லியன் பேர் இருக்கும் ஈரானில் வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே முழுவதுமாக தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதற்காக 6.3 மில்லியன் டோஸ்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அதேசமயம் வெளிநாடுகளில் இருந்து வர வேண்டி இருப்பதால் உரிய நேரத்தில் தடுப்பூசி போட முடியாத சூழல் நிலவுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தற்போது சீனாவின் சினோபார்ம், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad