இஷ்டம் இருந்தால் மாஸ்க் போடலாம்.. கட்டுப்பாடுகள் தளர்வு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

இஷ்டம் இருந்தால் மாஸ்க் போடலாம்.. கட்டுப்பாடுகள் தளர்வு!

இஷ்டம் இருந்தால் மாஸ்க் போடலாம்.. கட்டுப்பாடுகள் தளர்வு!


இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இம்மாதம் 19ஆம் தேதி ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படவுள்ளது. இதற்கு பின், மக்கள் விருப்பம் இருந்தால் மட்டும் மாஸ்க் அணிந்துகொள்ளலாம் என
இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக், “தடுப்பூசி போடும் பணிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாடுகளை நாம் தளர்த்தி வருகிறோம். முடிந்த அளவுக்கு நாம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவோம்.

கொரோனாவுடன் சேர்ந்து வாழக்கூடிய வித்தியாசமான காலத்தை நோக்கி செல்கிறோம். பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து தனிநபர்களாக நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
எந்தவொரு சட்டக் கட்டுப்பாடுகளும் இல்லாத காலத்துக்கு நாம் நகருகிறோம். அதன்பின் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என அரசு கட்டாயப்படுத்தாது. தனிப்பட்ட பொறுப்புடன் மக்கள் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad