மாநில எல்லையில் தொடரும் பதற்றம் - 6 போலீசார் உயிரிழப்பு!
அசாம் - மிசோரம் மாநில எல்லையில், இரு மாநில போலீசாருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 போலீசார் பலியாகி உள்ளனர்.
வட கிழக்கு மாநிலங்களான அசாம் - மிசோரம் மாநில எல்லையான, மிசோரம் மாநிலத்தின் கோசிப் என்ற இடத்தில் உள்ள சோதனைச்சாவடியை அசாம் மாநில போலீசார் அதிவேகமாக கடந்ததாகவும், மிசோரம் மாநில காவல் துறையின் வாகனத்தை இடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், மிசோரம் மாநில போலீசார் மீது, அசாம் மாநில போலீசார் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால், இரு மாநில எல்லைகளில் பதற்றம் நிலவியது. இரண்டு மாநில போலீசாரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் குறித்து, அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மிசோரம் முதலமைச்சர் ஜோரம் தங்கா ஆகியோரிடமும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார்.
No comments:
Post a Comment