இறையன்பு ஐஏஎஸ் திமுகவில் சேர்ந்துட்டாரா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

இறையன்பு ஐஏஎஸ் திமுகவில் சேர்ந்துட்டாரா?

இறையன்பு ஐஏஎஸ் திமுகவில் சேர்ந்துட்டாரா?

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி அனுபவம் கொண்டிருக்கும் இறையன்பு ஐஏஎஸ், லட்சக்கணக்கான இளைஞர்களின் ஊக்கசக்தியாக திகழ்ந்து வருகிறார். இளைஞர்களுக்கான தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகளையும் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார்.

தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டதன் தொடர்சியாக, இறையன்பு ஐஏஎஸ் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார். அதில் ஒன்று, தான் எழுதிய புத்தகங்களை எந்த அழுத்தம் வந்தாலும் தான் தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் அரசு சார்பில் வாங்கக் கூடாது என்பது.

மற்றொன்று, ஆய்விற்காக மாவட்டங்களுக்கு வரும்போது ஆடம்பர உணவு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் தவிர்த்து விட வேண்டும் சாதாரண காலை உணவு, இரவு உணவு, இரண்டு காய்கறிகளுடன் மதியம் சைவ உணவே போதுமானது என்ற உத்தரவு. இந்த இரண்டு உத்தரவுகளும் பலரது பாராட்டுகளையும் பெற்றது.

இந்த நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு படத்துடன் திமுக நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுக நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டரில், “சொன்னத்தை செய்வோம்; செய்வதை சொன்னோம் என்று செய்து கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்.க்கும் நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த போஸ்டரானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, இறையன்புவையும் திமுகவில் சேர்த்துட்டீங்களா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad