மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: தமிழக அரசு தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: தமிழக அரசு தகவல்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: தமிழக அரசு தகவல்!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபப்டும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்ற மாநிலங்களில் கட்டி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், மதுரையில் மட்டும் கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை நிரந்தர கட்டிடம் கட்டும் வரை தற்காலிக இடத்தில் தொடங்கவும், எம்பிபிஎஸ்

மாணவர் சேர்க்கை மற்றும் வெளி நேயாளிகள் பிரிவை தொடங்கவும் உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவானது விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மதுரை எய்ம்ஸ் நிர்வாக முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கும். இந்த ஆண்டு எய்ம்ஸில் 50 மாணவர்களுக்கு சேர்க்கையை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் பரிந்துரை அளித்துள்ளோம்.எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அருகில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் தற்காலிகமாக அனுமதிக்கப்படுவர். மதுரை, தேனி, திண்டுக்கல் மருத்துவ கல்லூரிகளில் எய்ம்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு இடம் தரப்படும். மாணவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர தமிழக அரசு தயாராக உள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தால் அது செயல்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி தொடர்பாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு பாராட்டு தெரிவித்தது. மேலும், தமிழக அரசின் திட்ட அறிக்கைக்கு குறித்து பதிலளிக்க ஒன்றிய அரசு, எய்ம்ஸ் இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

No comments:

Post a Comment

Post Top Ad