அடேங்கப்பா, 2000 கிலோ தங்கத்தை பயன்படுத்த புதிய திட்டம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

அடேங்கப்பா, 2000 கிலோ தங்கத்தை பயன்படுத்த புதிய திட்டம்!

அடேங்கப்பா, 2000 கிலோ தங்கத்தை பயன்படுத்த புதிய திட்டம்!

கோவில்களுக்கு காணிக்கையாக வந்த 2 ஆயிரம் கிலோ தங்கம் எந்த பயமுமின்றி தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவில்களுக்கு காணிக்கையாக வந்த 2000 கிலோ தங்கம் பயனின்றி உள்ளது. அவற்றை வைப்பு நிதியாக வைத்து அதில் வரும் வட்டியை கோவில் சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு முறையாக கும்பாபிஷேகம் நடத்துவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 180 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 மலைக்கோவில்களில் விரைவில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்.

திருத்தணி, சோளிங்கர், திருக்கழுகுன்றம், திருச்சி, திருச்செங்கோடு ஆகிய ஐந்து முக்கிய கோவில்களில் ரோப்கார் வசதி செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.திருச்செந்தூர், சோளிங்கர், மருதமலை உள்ளிட்ட கோயில்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து வசதிகளை மேம்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் 47 கோவில்கள் மட்டுமே பிரசித்திப்பெற்ற கோயில்களாக இருந்தன. ஆனால் தற்போது 539 கோவில்கள் சீரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா, சிங்கப்பூரில் உள்ள 3 சிலைகள் விரைவில் தமிழ்நாடு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad