ரேஷன் கடைகள்: பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

ரேஷன் கடைகள்: பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்!

ரேஷன் கடைகள்: பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்!

தமிழகத்தில் மாதம் 30 நாட்களும் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படும் என, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நியாய விலை கடையில், திடீரென, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் ஊழியரிடம் நியாய விலைக் கடையில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும், எத்தனை கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்தும் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து, நியாய விலைக் கடைகளில் உள்ள ஆவணங்களையும் பயோ மெட்ரிக் கருவியையும், அவர் ஆய்வு செய்தார்.

இதன் பின்னர், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் இருக்கக் கூடிய அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம். அதன் அடிப்படையிலேயே தற்போது திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் இருக்கக்கூடிய அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும். மாதம் 30 நாட்களும் நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கான பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad