ஒலிம்பிக் வீரர்களுக்கான யுவனின் ''வென்று வா'' பாடல்: தமிழக அரசு வெளியீடு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

ஒலிம்பிக் வீரர்களுக்கான யுவனின் ''வென்று வா'' பாடல்: தமிழக அரசு வெளியீடு

ஒலிம்பிக் வீரர்களுக்கான யுவனின் ''வென்று வா'' பாடல்: தமிழக அரசு வெளியீடு

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில் ''வென்று வா வீரர்களே'' என்ற பாடலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் (இன்று) 16.7.2021 அன்று காணொலிக் காட்சி மூலமாக பேசினார்.


அப்போது, “இந்த அரசு விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளிக்கும் அரசாக இருக்கும். இந்த அரசுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் நீங்கள் அனைவரும் பதக்கத்துடன் வரவேண்டும். அனைவரும் பதக்கம் பெற எனது வாழ்த்துகள்” என்று உற்சாகப்படுத்தி வாழ்த்தினார்.

அதன் தொடர்ச்சியாக, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் தமிழ்நாடு கூடைப் பந்தாட்டக் கழகத்தால் தயாரிக்கப்பட்டு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இயற்றி
இசையமைத்துள்ள ''வென்று வா வீரர்களே'' என்ற பாடலையும் முதல்வர் வெளியிட்டார்.

இந்நிகழ்வின்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad