ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம்... தேடி வந்த காவல் துறை பணி..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம்... தேடி வந்த காவல் துறை பணி..!

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம்... தேடி வந்த காவல் துறை பணி..!

ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு, காவல் துறையில் கூடுதல் உதவி ஆணையர் (விளையாட்டு) பதவி வழங்க, மணிப்பூர் மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மகளிருக்கான பளுதூக்கும் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்த இவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், வெள்ளிப் பதக்கத்துடன் இந்தியா திரும்பிய மீராபாய் சானுவுக்கு, டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “இந்த போட்டி தீவிர சவாலாக இருந்தது. இதற்கான தயாரிப்புகளை 2016லிருந்தே தொடங்கி விட்டோம். ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பின்னர் நாங்கள் எங்களின் பயிற்சி முறையை மாற்றியமைத்தோம். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக நானும் எனது பயிற்சியாளரும் 5 ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளோம்.” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை மீராபாய் சானு வென்றதையடுத்து, அவருக்கு மணிப்பூர் காவல் துறையில் கூடுதல் எஸ்.பி (விளையாட்டு) பதவி வழங்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad