ஆக.9 முதல் தொடக்கம்: கல்லூரி மாணவர்களே ரெடியாகுங்க -அதிகாரபூர்வ அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

ஆக.9 முதல் தொடக்கம்: கல்லூரி மாணவர்களே ரெடியாகுங்க -அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஆக.9 முதல் தொடக்கம்: கல்லூரி மாணவர்களே ரெடியாகுங்க -அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்க இருப்பதாக உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களை தவிர இரண்டாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரையிலான மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்க உள்ளது” என்று கூறினார்.

“அண்ணா பல்கலை கழகத்தில் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு மற்றும் தேர்வுகளில் மதிப்பெண் கணக்கீடு செய்வது போல் அனைத்து பல்கலை கழகங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பீட்டு முறை கொண்டுவருவது குறித்து மானவர்களிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது. இது குறித்து அரசு பரிசீலிக்கும்.

பொறியியல் படிப்புகளான பி.இ, பி டெக் ஆகியவற்றிற்கு நேற்று மாலை வரை 41363 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,26,748 விண்ணப்பங்கள் மானவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன இது அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்படும் .


மாணவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் விரும்பும் கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். கல்லூரி திறப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து அறிவிக்கப்படும்.

அனைத்து தனியார் கல்லூரிகளிலும் கொரோன காலம் முடியும் வரை 75 சதவிகித கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.

அண்ணா பல்கலை கழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகளில் தோல்வி அடைந்தால் தகுதி நீக்கம் செய்யப்படும் முறை நடைமுறையில் உள்ளது. அவை மாற்றம் செய்யப்பட்டு பிற கல்லூரிகளில் உள்ளது போல் அரியர் தேர்வுகள் எழுத வாய்பளிக்கப்படும். ஆன்லைன் வகுவுகளில் மாணவர்கள் பங்கேற்க கூடிய வகையில் சிம் கார்டுகள் வழங்கப்படும்” என்று உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad