திமுக சொன்னீங்களே, செஞ்சீங்களா? பாட்டு பாடி கதறவிடும் அதிமுக! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

திமுக சொன்னீங்களே, செஞ்சீங்களா? பாட்டு பாடி கதறவிடும் அதிமுக!

திமுக சொன்னீங்களே, செஞ்சீங்களா? பாட்டு பாடி கதறவிடும் அதிமுக!

தமிழகத்தில் கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றுக் கொண்டது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு நலத்திட்டங்களிலும் கவனம் செலுத்தி வந்தது. குறிப்பாக சட்டமன்ற கூட்டத்தொடரின் ஆளுநர் உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியானது. ஆனால் அதில் தேர்தல் வாக்குறுதிகள் பலவும் இடம்பெறவில்லை என்று அதிமுக குற்றம்சாட்டியது. இந்த சூழலில் மாநிலம் தழுவிய அளவிலான போராட்டத்தை அதிமுக இன்று முன்னெடுத்துள்ளது. தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட நீட் தேர்வு ரத்து,

வாக்குறுதிகள் என்னாச்சு?

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், எரிபொருள் விலை குறைப்பு, கல்விக்கடன் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். கழக ஒருங்கிணையாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்

எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேனி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

திமுகவிற்கு எதிராக கோஷம்

மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்களது மாவட்டங்களில் திமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது அதிமுக கொடிகளை ஏந்தி, திமுக அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக தேனியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், எங்களது போராட்டம் திமுகவின் வாக்குறுதிகளை நினைவுபடுத்துவதற்கே என்று குறிப்பிட்டார்.



மாநிலம் தழுவிய அதிமுக போராட்டம்

இதேபோல் சேலத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப் போட்டு திமுக அரசு செயல்பட்டு வருகிறது. தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக இப்படி ரெய்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டினார். நீட் தேர்வு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள வல்லுநர்கள் குழுவானது கண் துடைப்பு நாடகம்.

தமிழக மக்கள் கடும் மின் வெட்டை சந்தித்து வருகின்றனர். மாதாந்திர மின் கட்டண முறை அமல்படுத்தப்பட வில்லை. நுகர்வோருக்கு அதிகப்படியான கட்டணத்தை போட்டு சிரமத்தை அளிக்கின்றனர் என்று பழனிசாமி தெரிவித்தார். குறிப்பாக சென்னையில் முன்னாள் அமைச்சர்

ஜெயக்குமார், ’அண்ணே அண்ணே ஸ்டாலின் அண்ணே, நம்ம ஊரு நல்ல ஊரு, இப்ப ரொம்ப கெட்ட போச்சு அண்ணே’ என்ற பாடலை பாடி தொண்டர்களுடன் போராட்டம் நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad