பாடம் எடுக்கும் திண்டுக்கல் லியோனி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

பாடம் எடுக்கும் திண்டுக்கல் லியோனி!

பாடம் எடுக்கும் திண்டுக்கல் லியோனி!

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் தனியார் பள்ளிகளே ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வரும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் எடுக்கவுள்ளதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் ஐ லியோனி தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் லியோனி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்திற்கு பதிலாக புத்தகம் தரவேண்டும் என்று கூறியதன் மூலம் வந்த 2 லட்சம் புத்தகங்களை நூலகங்களுக்கு கொடுத்துள்ளோம். தமிழில் இருக்கக்கூடிய பல நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றார்.

கல்வி தொலைக்காட்சியை பார்வையிட்டதாக தெரிவித்த அவர், ஏற்கனவே 30 வருடமாக ஆசிரியராக இருந்ததாகவும், அந்த அனுபவம் மூலம் கல்வி தொலைக்காட்சி மூலம் வாரத்திற்கு ஒருமுறை வகுப்பு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆங்கிலம், வேதியியல், இயற்பியல் பாடங்களுக்கான வகுப்புகளை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad