தரமான மருத்துவமனை தர்மபுரியில்: அமைச்சர் கொடுத்த நம்பிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

தரமான மருத்துவமனை தர்மபுரியில்: அமைச்சர் கொடுத்த நம்பிக்கை!

தரமான மருத்துவமனை தர்மபுரியில்: அமைச்சர் கொடுத்த நம்பிக்கை!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, மருத்துவக்கல்லூரி இயக்குனர் நாராயண பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வு கூட்டம் முடிந்தபின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒகேனக்கல் பகுதி, பெரியஅளவிலான சுற்றுலா தளமாக இருப்பதால், பரிசல் ஓட்டிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போடும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. அதேபோல் அந்த பகுதியில் பேருக்கால தாய்மார்களுக்கு பரிசு பெட்டகம் வழங்கும் முகாம் நடைபெற்றது. பென்னாகரம் பகுதியில் 3ஆவது அலை வந்தால் அதை எதிர்கொள்வதற்கு தயாராக, 100 கூடுதல் படுக்கை வசதியும், கூடுதல் ஆக்சிஜன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் பார்வையிட்டோம்.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவனை வளாகத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த அவசர கால தாய்சேய் சிறப்பு சிகிச்சை பிரிவு மைய கட்டிடத்தை வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில், தமிழக முதல்வர் திறந்து வைப்பார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேவைத்துறைகளை சேர்ந்த அனைத்து அலுவலர்களுடன் நோய் தடுப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.



இருதயம், நரம்பியல் துறை சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தேவையான வசதிகள் இம்மருத்துவமனைக்கு செய்து கொடுக்கப்படும். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, பல்வேறு மாவட்டங்களிருந்து சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு கட்டிடம் ஏற்கனவே ஒன்று உள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி போன்ற பல மாவட்டங்களில் இருந்து கூடுதலாக குவிகின்றனர்.

மருத்துவ வசதி தேவை இருப்பதால், அவர்களது சிரமைத்தை போக்கவே, தமிழக முதல்வரால் ஒருங்கிணைந்த அவசரகால தாய்சேய் கட்டிடம் 200 படுக்கை வதிகளுடன் திறந்து வைக்கப்பட உள்ளது. ஆந்திரா, கர்நாடக மாநில எல்லையாக இருப்பதால் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எல்லா சிறப்பு சிகிச்சை வசதிகளுடன் இயங்கக்கூடிய ஒரு அரசு மருத்துவமனையாக ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.

வரும் நிதிநிலை அறிக்கையில் இதை எதிர்பார்க்கலாம். தர்மபுரி அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள், களப்பணியாளர்கள், அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்தப்பணியாளர்கள் எவ்வளவுபேர் பணியாற்றுகிறார்கள் என்பதை கண்டறிந்து, காலி பணியிடங்கள் நிரப்பப்படும். 30ஆயிரம் அவுட்சோர்சிங், ஒப்பந்த பணியாளர்கள் தமிழகம் முழுவதும் பணியாற்றுகிறார்கள். இவர்களை முறைப்படுத்தி காலிபணியிடங்கள் நிரப்பப்படும்” என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad