ஓபிஎஸ், உதயநிதிக்கு எதிரான வழக்கு: ஆகஸ்ட் 9க்கு தள்ளி வைப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

ஓபிஎஸ், உதயநிதிக்கு எதிரான வழக்கு: ஆகஸ்ட் 9க்கு தள்ளி வைப்பு!

ஓபிஎஸ், உதயநிதிக்கு எதிரான வழக்கு: ஆகஸ்ட் 9க்கு தள்ளி வைப்பு!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வியடைந்தது. திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. தேர்தலில் தோல்வியடைந்த பலரும், வெற்றி பெற்ற வேட்பாளர்களை எதிர்த்து பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த வகையில், சட்டமன்றத் தேர்தலில் தேனி மாவட்டம், போடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஒபிஎஸ் வெற்றியை எதிர்த்து வாக்காளர் மிலானி என்பவரும், உதயநிதியின் வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி ஆகியோர் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்குகள் நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, ஓபிஎஸ்-க்கு எதிரான வழக்கில், சொத்து மதிப்பு குறைத்துக் காட்டப்பட்டுள்ளதாகக் கூறுவதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு மனுதாரர் மிலானி தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதேபோல், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கில், வைப்புத்தொகை செலுத்தாதது குறித்து விளக்கமளிக்க மனுதாரர் எம்.எல்.ரவி தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்குகளை வருகிற ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad