அன்வர் ராஜா அப்படி என்ன தான் பேசினார்? அதிமுகவுக்குள் திடீர் குழப்பம்!
அன்வர் ராஜா பரமக்குடியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “அதிமுகவிற்கு என்று தனி ஓட்டு வங்கி உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை சின்னம் இந்த மூன்றும்தான் அதிமுக ஓட்டு வங்கியை காப்பாற்றி வைத்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொன்னால்தான் அதிமுகவிற்கு ஓட்டு போடுவார்கள். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் பெயரை சொல்ல மறந்ததே அதிமுகவின் தோல்விக்கு காரணமாகி விட்டது. அதிமுக ஆட்சிக்கு வராவிட்டாலும் யாரும் வருத்தப்படவில்லை” என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
“ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது 200 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஜெயலலிதா உயிருடன் இருந்து இத்தேர்தலில் 70 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்திருந்தால் 300க்கும் மேற்பட்ட கட்சியினர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் இத்தேர்தலில் தோல்வியுற்று ஆட்சிக்கு வரமுடியவில்லை இதுகுறித்து யாரும் வருத்தப்படவில்லை, யாரும் தூக்கிட்டு செத்து இருக்கிறாரா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் டெல்லி சென்று மோடியையும் அமித் ஷாவையும் காத்திருந்து சந்தித்துவிட்டு வந்துள்ள நிலையில் அன்வர் ராஜாவின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்வர் ராஜா பேச்சுக்கு அதிமுகவுக்குள்ளே எதிர்ப்பு நிலவுகிறது. செல்லூர் ராஜா, “தலைவர்கள் பெயர் இல்லாமல் அதிமுக இல்லை. அன்வர்ராஜா கூறிய கருத்து தவிர்க்கப்பட வேண்டியது. எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களைப் பெரிதாக வைத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் படங்களைச் சிறிதாக வைத்துத்தான் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதிமுகவின் தோல்வி எதிர்பாராதவிதமானது. தோல்விக்கு பாஜக உள்ளிட்ட தோழமை கட்சிகள் காரணமல்ல” தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment