புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்..!
திட்ட மதிப்பீடுத் தொகை:-
Needs Scheme in Tamil – தொழில் தொடங்குவதற்கான திட்ட மதிப்பு தொகை ரூ. 5 லட்சத்திற்கு மேலும், 1 கோடி வரையிலும் இருந்தால் அதற்கான முதலீட்டை இந்த திட்டத்தின் மூலம் பெறலாம்.
மானிய தொகை:-
அரசு மூலம் வழங்கப்படும் மானிய உதவி, இத்திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சம் 25 லட்சம் மற்றும் 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.
வயது வரம்பு:-
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது பொது பிரிவினருக்கு 35 ஆண்டுகளும்.
அதிகபட்ச வயது இதர சிறப்பு பிரிவினருக்கு 45 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:-
பட்டம் மற்றும் பட்டயம், ITI, அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் மூலம் தொழில்சார் பயிற்சி படித்தவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
பயனாளிகளின் பங்குத் தொகை:-
பொது பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், இதர சிறப்பு பிரிவினருக்கு மதிப்பீட்டில் 5 சதவீதமும் பங்களித்திருக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டு முறை:-
ஆதி திராவிடருக்கு 18 சதவீதம் ஒதுக்கீட்டு வழங்கப்படுகிறது.
பழங்குடியினருக்கு 1 சதவீதம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் ஒதுக்கீட்டு வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் மகளிருக்கு மேற்கண்ட தகுதி உள்ள ஆதரவற்ற / கைவிடப்பட்ட மகளிருக்கு முன்னுரிமை கொடுத்து 50 சதவீதம் இடஒதுக்கீட்டு வழங்கப்படுகிறது.
வருமான வரம்பு:-
இந்த திட்டத்தின் கீழ் வருமான வரம்பு எதுவும் கிடையாது.
பங்குதாரர் நிறுவனம்:-
உரிமையாளர் / பங்குதாரர் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதியுடையவர்கள்.
No comments:
Post a Comment