கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 8, 2021

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு!

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு!



கொரோனா தொற்றின் முதல் அலையில் இருந்து மீண்டு தற்போது இரண்டாவது அலை இந்தியாவில் மெல்லக் குறையத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, 3,4ஆம் அலைகள் வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேசமயம், லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் வகையும் உலக நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரள மாநிலத்தில் 24 வயதான கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, தலைவலி, காய்ச்சல், சிவப்பு நிறத்தில் உடலில் ஆங்காங்கே குறிகள் உள்ளிட்டவைகளால் அவதிப்பட்டு வந்த அந்த பெண் கடந்த மாதம் 28ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, அப்பெண்ணுக்கு நேற்று குழந்தை பிறந்தது. இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டு எல்லை பகுதியில் அப்பெண்ணின் வீடு உள்ளதாகவும், கேரளாவை தாண்டி அப்பெண் வெளியில் எங்கும் செல்லவில்லை. அப்பெண்ணின் தாயாருக்கும் இதேபோன்று அறிகுறி ஒரு வாரத்துக்கு முன்பு ஏற்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சந்தேகத்திற்கு இடமான 19 பேரின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உறுதிபடுத்தியுள்ளார். 19 பேரில் 13 பேர் சுகாதார ஊழியர்கள் என்பது கவனிக்கத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad