அதிமுக ஆட்சியில் இப்படியா செய்வாங்க? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 25, 2021

அதிமுக ஆட்சியில் இப்படியா செய்வாங்க?

அதிமுக ஆட்சியில் இப்படியா செய்வாங்க?

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியிலும் கொரோனாவை கட்டுப்படுத்த ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவது முகக்கவசம். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த அதிமுக ஆட்சியில் முகக்கவசம் அணிவது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய முந்தைய அரசு, ரேஷன் கடைகள் மூலம் முகக்கவசங்களை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கியது.

இந்த நிலையில், அதிமுக ஆட்சியில் தரமற்ற முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சைதாபேட்டையின் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த அதிமுக ஆட்சியில் பாதுகாப்பான முகக்கவசங்களை வழங்காமல், தரமற்றதை வழங்கியுள்ளனர். பாதுகாப்பான முககவசங்களை வழங்காமல் நாடா துணியில் தயாரித்ததை வழங்கியுள்ளார்கள். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி திட்டத்தை வருகிற 28ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல் தெரிவித்த மா.சுப்பிரமணியன், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மிக விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாகவும், அதற்காக விழா நடைபெறும் இடத்தை தேர்வு செய்ய இன்று மாலை கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad