கொரோனா நிவாரணத் தொகை: மறக்காம இந்த தேதிக்குள்ள வாங்கிடுங்க - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்று பெற்று முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், முதல் கையெழுத்தாக தேர்தல் பிரசாரத்தில் அறிவித்தபடி, கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். இந்த தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டு தற்போது இரண்டாம் தவணையும் அதனுடன் இணைந்து 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் தமிழக அரசின் நிதியுதவியை சிலரால் பெற முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு நிவாரணத் தொகையை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
அதன்படி, “இதுவரை கொரோனா நிவாரணத்தொகை, மளிகை பொருட்களை பெறாதவர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம். மே 10ஆம் தேதி முதல் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த சுமார் 3 லட்சம் பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இருந்து பொருட்களை தங்கு தடையின்றி பெறலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment