சார்பட்டா படத்தின் டான்ஸிங் ரோஸ் இவர்தான்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 25, 2021

சார்பட்டா படத்தின் டான்ஸிங் ரோஸ் இவர்தான்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டல்!

சார்பட்டா படத்தின் டான்ஸிங் ரோஸ் இவர்தான்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டல்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் திமுகவின் பிரச்சாரப் படமாகவே உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கும், விளையாட்டு துறைக்கும் தொடர்பே இல்லை என்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுகவின் 30 ஆண்டுகால நல்லாட்சியை திட்டமிட்டே இயக்குநர் பா.ரஞ்சித் மறைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

சார்பட்டா மீது குற்றச்சாட்டு

மேலும் தான் பாக்ஸிங் செய்வது போன்ற வீடியோ ஒன்றையும் அதில் பதிவிட்டுள்ளார். இதுபற்றி சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டை நானும் பார்த்தேன். தற்போது சார்பட்டா திரைப்படத்தின் விடுபட்ட காட்சிகள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

ஜெயக்குமார் தான் டான்ஸிங் ரோஸ்

அதில் ஜெயக்குமாரே குத்துச்சண்டை போடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர் தான் டான்சிங் ரோஸ் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அந்த காட்சியையும் பாருங்கள் என்று கிண்டலாக பதிலளித்துவிட்டு புறப்பட்டார். முன்னதாக கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச முகக்கவசங்கள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,

விரைவில் புதிய திட்டம்


நாடா துணியில் முகக்கவசங்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இவை முற்றிலும் தரமற்றவை. இத்தகைய முகக்கவசங்கள் விநியோகம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் உலகத்திற்கே எடுத்துக்காட்டான திட்டமாக இருக்கும். இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளார்.

எந்த மாவட்டத்தில் இருந்து தொடங்கலாம் என்பது பற்றி அடுத்த சில நாட்கள் ஆய்வு செய்யவிருக்கிறோம் என்று கூறினார். அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோரின் உடல் வெப்பநிலை, அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்று எல்லைப் பகுதிகளில் உரிய ஆய்வு செய்த பின்னர் தான் உள்ளே அனுமதிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad