ஆர்எஸ்எஸ் பயிற்சி எடுத்தவர்களை விரட்டியடித்த இந்துக்கள்: தமிழகத்தில் தரமான சம்பவம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 25, 2021

ஆர்எஸ்எஸ் பயிற்சி எடுத்தவர்களை விரட்டியடித்த இந்துக்கள்: தமிழகத்தில் தரமான சம்பவம்

ஆர்எஸ்எஸ் பயிற்சி எடுத்தவர்களை விரட்டியடித்த இந்துக்கள்: தமிழகத்தில் தரமான சம்பவம்

சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் சிறுவாச்சி. இங்குள்ள பழமை வாய்ந்த கோவில் ஒன்றில் ஆர்எஸ்எஸ் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக கிராம மக்களுக்கு தகவல் சென்றுள்ளது.
அங்கு சென்ற கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் சிலர், இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க, அங்கு ஆர்எஸ்எஸ் பயிற்சி மேற்கொண்டவர்களை சரமாரியாக கேள்வி எழுப்பி அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்த நிகழ்வை வீடியோக சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் பெரும் கவனம் பெற்றது.

அந்த வீடியோவில், சிறுவாச்சி கிராமத்தை சேர்ந்த இந்துக்கள், ஒரு அரசு ஆசிரியரே ஆர்எஸ்எஸ் பயிற்சியை கொடுப்பது சரியா? ஒழுங்கா உள்ள கிராமத்தை இப்படி தயார் படுத்துவது சிக்கலான விஷயம். இந்த கோவிலினால் ஒரு கொலையே நடந்துள்ளது. ஒழுங்கான ஆசிரியராய் இருந்து மாணவர்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லி கொடுங்கள். இப்படி மாணவர்களுக்கு ஆர்எஸ்எஸ் பயிற்சி கொடுக்காமல் நடுநிலையாய் இருங்கள்.

கோயிலுக்கு செல்பவர்கள், விபூதி பூசியவர்கள் எல்லாம் இந்துக்களா என்று எச். ராஜா கேட்கிறார். பார்ப்பனர்களை மட்டும் இந்துக்கள் என இங்கே முன் வைக்கிறார்கள் அதை புரியாமல் நீங்களே இப்படி நடந்து கொள்கிறீர்கள்.

எங்களையெல்லாம் இந்துக்கள் என்று ஏற்றுக்கொண்டு கோயிலுக்குள் விட சொல்லுங்கள் பார்க்கலாம். நீங்கள் எங்கு வேணாலும் சென்று அரசியல் பண்ணுங்கள், எங்கள் ஊரில் செய்ய வேண்டாம் என்று ஆர்எஸ்எஸ் பயிற்சி கொடுத்த அரசு ஆசிரியரை கிராமத்தினர் திட்டி அங்கிருந்து அனுப்பினர்.

No comments:

Post a Comment

Post Top Ad