ரோல்ஸ் ராய்ஸ் வழக்கு: நடிகர் விஜயின் மேல்முறையீடு மனு நாளை விசாரணை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

ரோல்ஸ் ராய்ஸ் வழக்கு: நடிகர் விஜயின் மேல்முறையீடு மனு நாளை விசாரணை!

ரோல்ஸ் ராய்ஸ் வழக்கு: நடிகர் விஜயின் மேல்முறையீடு மனு நாளை விசாரணை!


ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கோரிய வழக்கில், பிரபல நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன், அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில், அபராதத் தொகையை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும் என்றும், வரி என்பது நன்கொடை அல்ல, கட்டாய பங்களிப்பு. நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல், ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியிருந்தார்.

இதை அடுத்து, தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்தும், தீர்ப்பில் நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்கக் கோரியும், நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, நாளை விசாரணைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad