அடங்காத கர்நாடகம், அடிவாங்கும் தமிழகம்; வைகோ வேதனை!
தலைநகர் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை தமிழ்நாட்டு அனைத்துக் கட்சிக் குழு இன்று சந்தித்து பேசியது. அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தன்னுடைய கருத்துகளை முன்வைத்தார். அதாவது, மேகதாதுவில் கர்நாடகம் புதிய அணை கட்ட முயற்சிப்பது, தமிழ்நாட்டின் உரிமைகளை மறுப்பதாகும். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுத்தால், லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறி விடும். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பகுதி மக்கள் வேலை இழந்து விடுவார்கள்.
தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினை
வாழ்க்கை ஆதாரங்களை இழந்துவிடுவார்கள். எனவே மத்திய அரசு, கர்நாடகத்துக்கு ஆதரவாக இருந்தால், தமிழ்நாடு மட்டும் அல்ல. ஒட்டுமொத்தமாக இந்தியாவின் வேளாண் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவிடும். இந்தப் பிரச்சினையை நாம் கூட்டாகச் சேர்ந்துதான் எதிர்கொள்ள வேண்டும். கர்நாடக மாநிலம், தனது பாசனப் பரப்பை, 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்று காவிரி நதிநீர் தீர்ப்பாயம் இடைக்கால ஆணை பிறப்பித்து இருந்தது.
கர்நாடகா செய்த துரோகம்
ஆனால் கர்நாடகம் தனது பாசனப் பரப்பை 18.85 லட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தி இருக்கின்றது. அது மட்டும் அல்ல, உடனடியாக 21.1 லட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒட்டுமொத்தமாக 30 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை விரிவுபடுத்தவும் திட்டம் வகுத்துள்ளனர். அதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல புதிய ஏரிகள், பாசன நீர்நிலைகளைப் புதிதாக அமைத்து உள்ளது.
துயரில் வாடும் தமிழகம்
1971 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் காவிரி பாசனப் பரப்பு 25.03 லட்சம் ஏக்கராக இருந்தது; நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில், அதை 24.71 லட்சம் ஏக்கராகக் குறைத்துவிட்டது. அதுவும், தற்போது, 16 லட்சம் ஏக்கராக சுருங்கி விட்டது. இது, கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் சேர்ந்து நடத்துகின்ற கூட்டுச் சதி ஆகும். தமிழ்நாட்டின் முதல்வர்
மு.க.ஸ்டாலின் அவர்கள், டெல்லிக்கு வந்து பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்து,
No comments:
Post a Comment