சாரி ராங்நம்பர்ன்னு சொல்லிட்டு ஃபோனை வச்சுடுவேன்...சசிகலாவை பங்கமாய் கலாய்க்கும் ஜெயக்குமார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

சாரி ராங்நம்பர்ன்னு சொல்லிட்டு ஃபோனை வச்சுடுவேன்...சசிகலாவை பங்கமாய் கலாய்க்கும் ஜெயக்குமார்!

சாரி ராங்நம்பர்ன்னு சொல்லிட்டு ஃபோனை வச்சுடுவேன்...சசிகலாவை பங்கமாய் கலாய்க்கும் ஜெயக்குமார்!


அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின்போது அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்து டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு சசிகலா அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

எல்லாம் முடிந்து திமுக ஆட்சி அமைத்த பிறகு, தற்போத அதிமுகவை கைப்பற்ற அவர் கடினபிரயத்தனம் செய்து வருகிறார். இதில் ஒரு முயற்சியாக மாவட்டவாரியாக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளுடன் அவர் அலைபேசி தொடர்புகொண்டு தொடர்ந்து பேசி வருகிறார்.

சசிசலாவின் இந்த ஆடியோ அரசியல் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவருடன் பேசிவரும் அதிமுக நிரவாகிகளை இபிஎஸ். ஓபிஎஸ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி வருகின்றனர். ஆனாலும் சசிகலாவின் ஆடியோ அரசியல் இன்றுவரை தொடர்நது கொண்டுதான் இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, சசிகலா மீண்டும் அதிமுகவுக்கு திரும்புவதை அக்கட்சியின் சீனியர்களும், முன்னாள் அமைச்சர்களுமான ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் விரும்பவில்லை என தெரிகிறது.இதனை அவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனை மெய்ப்பிக்கும் விதத்தில் ஜெயக்குமார், தமக்கே உரித்தான பாணியில் சசிகலாவை பங்கமாய் கலாய்த்துள்ளார்.

பிரபல வார இதழுக்கு அண்மையில் அளித்த பேட்டியில், "சசிகலா தரப்புல இருந்து போன் கால் வந்துச்சுன்னா என்ன சார் பன்னுவீங்க"என்று நிருபர் கேட்க, அதற்கு, "சாரி ராங் நம்பர்னு வச்சுடுவேன்" என தமக்கே உரிய ஸ்டைலில் பதிலளித்து, சசிகலாவை ஜெயக்குமார் பங்கமாய் கலாய்த்துள்ளார். தமது ட்விட்டர் பக்கத்தில் ஜெயக்குமார் பகிர்ந்துள்ள இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad