"கொங்கு நாடு" இடம் பெற்றது எப்படி? - எல். முருகன் விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

"கொங்கு நாடு" இடம் பெற்றது எப்படி? - எல். முருகன் விளக்கம்!

"கொங்கு நாடு" இடம் பெற்றது எப்படி? - எல். முருகன் விளக்கம்!


கொங்கு நாடு விவகாரம் குறித்து, ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் அளித்துள்ள விளக்கம் தற்போது பேசுப் பொருளாக அமைந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழக பா.ஜ.க., தலைவராக இருந்த எல்.முருகன் உட்பட 43 பேர் புதிதாக ஒன்றிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

ஒன்றிய இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட எல்.முருகனுக்கு, 3 துறைகள் ஒதுக்கப்பட்டன. ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, வெளியிடப்பட்ட அமைச்சர்களின் விபரக் குறிப்பில், எல்.முருகன் கொங்கு நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


அதாவது, தமிழகத்தில் உள்ள கொங்கு மண்டலத்தை தனியாக பிரித்து, தனி யூனியன் பிரதேசமாக்க ஒன்றிய பா.ஜ.க., அரசு திட்டமிடுவதாகவும், மத்திய அரசை ஒன்றிய அரசு என, தி.மு.க.,வினர் அழைப்பதால், அதற்காக பழிவாங்கும் பொருட்டு, ஒன்றிய அரசு இதனை செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், பா.ஜ.க.,வினர் இதை மறைமுகமாக ஆதரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழக பா.ஜ.க.,வின் புதிய தலைவராக, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

கொங்கு நாடு சர்ச்சை குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விளக்கமளித்த ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், "அமைச்சரவை மாற்றத்தின் போது வெளியிடப்பட்ட தனது விவரக் குறிப்பில் கொங்கு நாடு என்று இடம்பெற்றிருந்தது தட்டச்சுப் பிழையே" எனத் தெரிவித்தார்.

தமிழகத்தை உடைத்து, கொங்கு நாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என, பா.ஜ.க., தலைவர்கள் சிலர் கூறி வரும் நிலையில், ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகனின் பதில், அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad