இந்தியாவில் மீண்டும் கால் பதிக்கும் "டிக் டாக்" - பப்ஜி போலவே பக்கா ப்ளான்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 20, 2021

இந்தியாவில் மீண்டும் கால் பதிக்கும் "டிக் டாக்" - பப்ஜி போலவே பக்கா ப்ளான்!

இந்தியாவில் மீண்டும் கால் பதிக்கும் "டிக் டாக்" - பப்ஜி போலவே பக்கா ப்ளான்!


கடந்த ஆண்டு ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட டிக் டாக் நிறுவனம், மீண்டும் இந்தியாவுக்குள் நுழையவிருப்பதக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜம்மு - காஷ்மீரின் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம், இந்தியா - சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய ராணுவத்தின் பதில் தாக்குதலில், 50-க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலால் அதிருப்தி அடைந்த ஒன்றிய அரசு, இந்தியாவில் புழக்கத்தில் இருந்த, சீனாவைச் சேர்ந்த டிக் டாக், யுசி பிரவுசர், ஷேர் சாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு, கடந்தாண்டு ஜூன் மாதம் 29ம் தேதி அதிரடியாக தடை விதித்தது.

சீனாவுடன் எந்த தகவலையும் பகிர மாட்டோம் என, தடை செய்யப்பட்ட செயலி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தும், ஒன்றிய அரசு அதனை ஏற்க மறுத்து, ஆப்ஸ் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்தும் அந்த செயலிகளை நீக்கியது.

இந்நிலையில், டிக் டாக் செயலியின் டெவலப்பரான பைட் டான்ஸ் நிறுவனம், காப்புரிமை, வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரையை ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. ஜூலை 6 தேதியிட்ட வர்த்தக முத்திரை விண்ணப்பத்தின் விபரங்களை டெக் மாஸ்டர் முகுல் சர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் டிக் டாக்கின் பெயர் Tick tock என மாற்றப்பட்டுள்ளது. சிறு மாற்றங்களுடன் அதே செயலி இந்தியாவில் மீண்டும் கால் பதிக்க உள்ளது, இதன் மூலம் உறுதியாகி இருக்கிறது.

முன்னதாக, இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு கேம், அதே உச்சரிப்புடன் வேறொரு பெயரில் இந்தியாவில் மீண்டும் நுழைந்துள்ளது. தற்போது, இதே பாணியை டிக் டாக் நிறுவனம் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad