உஷார் மக்களே வீடு பார்ப்பது போல் நகையை திருட பெண் முயற்சி: விருதுநகர் மூதாட்டி தப்பி பிழைப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 20, 2021

உஷார் மக்களே வீடு பார்ப்பது போல் நகையை திருட பெண் முயற்சி: விருதுநகர் மூதாட்டி தப்பி பிழைப்பு!

உஷார் மக்களே வீடு பார்ப்பது போல் நகையை திருட பெண் முயற்சி: விருதுநகர் மூதாட்டி தப்பி பிழைப்பு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தர்மாபுரம் தெரு பகுதியை சேர்ந்தவர் அன்னம்மாள். வயது 61. தனியாக வசித்து வருகிறார்.
இவர் வீட்டிற்கு வாடகைக்கு வீடு பார்ப்பது போல் பச்சமடம் தெருவைச் சேர்ந்த சண்முகத்தாய் சென்றுள்ளார். சண்முகத்தாய்க்கு வயது 37. கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
வீடு பார்ப்பதாக சென்றவர் அண்ணம்மாளை தாக்கி 5 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார். சுதாரித்துக் கொண்ட அன்னம்மாள் கத்தி கூச்சலிட்டதையடுத்து அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்முகத்தாயை சுற்றி வலைத்து பிடித்துள்ளனர். தொடர்ந்து அவரை ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து ராஜபாளையம் வடக்கு காவல்துறையினர் சண்முகத்தாய் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


No comments:

Post a Comment

Post Top Ad