முதல்வர் தலைமையில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் குறித்து ஆய்வு..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

முதல்வர் தலைமையில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் குறித்து ஆய்வு..!

முதல்வர் தலைமையில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் குறித்து ஆய்வு..!



கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் ஆய்வுக் கூட்டம் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (13.07.2021) தலைமைச் செயலகத்தில், கால்நடை
பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்தும், துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், புதியதாகச் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்திற்குக் கால்நடைகளின் பங்கு மிக முக்கியமாக இருப்பதால், கால்நடைகளுக்குத் தரமான சிகிச்சை அளித்தல், கால்நடைகளை நோயிலிருந்து காப்பாற்றிடத் தடுப்பூசி செலுத்தும் பணியினை மேற்கொண்டு அவற்றின் நலனைப் பாதுகாத்தல், கால்நடை மருத்துவச்சேவை கிடைக்கப்பெறாத தொலைதூரக் கிராமங்களில் வசித்திடும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் கால்நடை மருத்துவமனை மூலம் கால்நடைகளுக்குச் சிகிச்சை அளித்தல் ஆகிய பணிகளைச் செவ்வனே


மேற்கொள்ளும்படி முதலமைச்சர் அறிவுறுத்தினார்.தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரித்து, கால்நடை வளர்க்கும் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்திட, உயர் மரபுத்திறன் கொண்ட காளைகளிலிருந்து நல்ல தரமான உறைவிந்தினைப் பயன்படுத்திச் செயற்கைமுறைக் கருவூட்டல் பணியைச் செயல்படுத்துதல், கால்நடைகளுக்குத் தேவையான அளவு பசுந்தீவன உற்பத்தியினை அதிகரித்தல், ஆகிய பணிகளை
முனைப்புடன் செயல்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad