அதிமுக போக்குவரத்து துறையை கடனில் விட்டுச் சென்றாலும் கூடுதல் பேருந்துகள் இயக்கம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 17, 2021

அதிமுக போக்குவரத்து துறையை கடனில் விட்டுச் சென்றாலும் கூடுதல் பேருந்துகள் இயக்கம்

அதிமுக போக்குவரத்து துறையை கடனில் விட்டுச் சென்றாலும் கூடுதல் பேருந்துகள் இயக்கம்


தமிழகத்தில் தற்போது 6262 சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மாநிலத்தில் கூடுதலாக 500 எலக்ட்ரிக்கல் வசதிகொண்ட பேருந்துகள் மற்றும் 2 ஆயிரம் டீசல் பேருந்துகள் வாங்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக அண்மையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டார்.
மேலும், தமிழகத்தில் 31 ஆயிரம் கோடி அளவில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் உள்ளதாக தெரிவித்தவர், எரிபொருட்களின் விலைகள் உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் உயராது என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும், அரசு பேருந்துகளில் திருக்குறள் பலகை வைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு பேருந்துகளிலும் வெவ்வேறு திருக்குறள் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது என்றும் நகரப்பேருந்துகளில் புதிய வண்ணம் பூச திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதலமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று 6 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடக்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையை கடனில் விட்டுச் சென்றாலும், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என சாமானியர்களுக்காக கூடுதல் பேருந்துகளை முதல்வர் இயக்கி வருவதாக கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad