கோவையைப் பதறவிடும் காட்டு யானைகள்: அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 18, 2021

கோவையைப் பதறவிடும் காட்டு யானைகள்: அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

கோவையைப் பதறவிடும் காட்டு யானைகள்: அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்!


கோவை மாவட்டத்தில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விளை நிலங்களில் புகுந்து தென்னை மரங்களைச் சாய்க்கும் காணொளி காட்சி வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கோவை ஆனைகட்டி, தொண்டாமுத்தூர், நரசிபுரம், மாதம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் கூட்டமாகக் காட்டுயானைகள் வந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது.


இந்த யானைகள் அங்குள்ள விளைநிலங்களில் உணவு உட்கொள்வது வழக்கமான ஒன்று. இந்த சூழலில் காட்டு யானை ஒன்று தொண்டாமுத்தூர் பகுதியில் விளை நிலங்களில் புகுந்து தென்னை மரங்களைச் சேதப்படுத்தும் காட்சியை வனத்துறையினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை இதுபோன்ற சம்பவம் நடந்தால் உடனடியாக ரோந்து பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பட்டாசுகள் வெடித்து வனப்பகுதிக்கு விரட்டி வருகின்றனர். குறிப்பாக இந்த காணொளி காட்சியில் யானை தென்னை மரத்தை அடியோடு சாய்த்துச் சேதப்படுத்துகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad