கொரோனாவை கட்டுப்படுத்த புதிய விதிகள்: அனுமதி சீட்டு கட்டாயம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய விதிகள்: அனுமதி சீட்டு கட்டாயம்!

 கொரோனாவை கட்டுப்படுத்த புதிய விதிகள்: அனுமதி சீட்டு கட்டாயம்!



கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலக நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனாலும், பொதுமக்களில் பலர் தடுப்பூசியை போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், பொதுமக்கள் தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ளும் பொருட்டு புதிய விதிகளை பிரான்ஸ் அரசு விதித்துள்ளது. அதன்படி, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும், கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே சுகாதார அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.

இந்த சுகாதார அனுமதிச் சீட்டு இல்லாத பட்சத்தில் மக்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார். அதாவது, உணவகங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கும் நீண்ட தூர ரயில் பயணங்கள், விமான பயணங்கள் மேற்கொள்வதற்கும் இந்த சுகாதார அனுமதி சீட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



அதேபோல், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அதிபர் இம்மானுவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த புதிய கட்டுப்பாடுகள், விதிகளால், சுமார் 9 லட்சம் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான முன் அனுமதியை பெற்றுள்ளனர். அதிபரின் இந்த அறிவிப்புக்கு பிறகு தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான முன்பதிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad