ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடும்: எஃப்.டி.ஏ., எச்சரிக்கை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடும்: எஃப்.டி.ஏ., எச்சரிக்கை

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடும்: எஃப்.டி.ஏ., எச்சரிக்கை



ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, அரிதான நரம்பு கோளாறுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது என, எஃப்.டி.ஏ., எனப்படும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கொரோனா வைரஸ் தடுப்பூசி முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது. தடுப்பூசி இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இன்னும் நிறுவப்படவில்லை என்று எஃப்.டி.ஏ கூறியிருந்தாலும், குய்லின் - பார் சிண்ட்ரோம் எனப்படும், பக்கவாத பாதிப்புகளின் அதிகரிப்பு, சமீபத்திய ஆய்வுகளில் காணப்பட்டது.

ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், மாடர்னா மற்றும் ஃபைசர் - பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிகள், அத்தகைய எந்தவொரு பிரச்னையையும் காட்டவில்லை என, எஃப்.டி.ஏ தெரிவித்தது

அவசர கால பயன்பாட்டு அங்கீகாரத்தின் கீழ் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து ஏற்படும் பாதகமான நிகழ்வுகளின் அறிக்கைகள் சேகரிக்கப்பட்டன. இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட 42 நாட்களில் குய்லின்-பார் நோய்க்குறியின் ஆபத்து அதிகரிப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

பொதுவாக, குய்லின்-பார் நோய்க்குறி உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன; ஆனால் அவை, ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி பெறுபவர்களிடையே 3 - 5 மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இதுவரை செலுத்தப்பட்ட 12.8 மில்லியன் ஜான்சன் தடுப்பூசிகளில், குய்லின் பார் சிண்ட்ரோம் (ஜிபிஎஸ்) பாதிப்புகளுடன் 100 அறிக்கைகள் அமெரிக்க தடுப்பூசி பாதக அறிக்கையிடல் அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று எஃப்.டி.ஏ., தெரிவித்திருக்கிறது.

குய்லின் பார் சிண்ட்ரோம் என்பது ஒரு நரம்பியல் கோளாறு. இது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் நரம்பு செல்களை சேதப்படுத்துகிறத. இதனால் தசை பலவீனம் மற்றும் சில நேரங்களில் பக்கவாதம் ஏற்படுகிறது. சில அரிய வகை இரத்த உறைவு சிக்கல்கள் எழுந்த பின்னர், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியைப் பயன்படுத்த அமெரிக்கா தடை விதித்தது. ஆனால் அபாயங்கள் குறைவாக இருப்பதை உறுதி செய்த பின்னர் ஏப்ரல் மாதத்தில் இந்த தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad