எச் ராஜா நீதிமன்றத்தையும் போலீசையும் இழிவாக பேசியுள்ளார் என ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

எச் ராஜா நீதிமன்றத்தையும் போலீசையும் இழிவாக பேசியுள்ளார் என ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி!

எச் ராஜா நீதிமன்றத்தையும் போலீசையும் இழிவாக பேசியுள்ளார் என ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி!


நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தொடர்ந்த வழக்கு விசாரணை தொடங்கியது.
முன்னாள் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2018ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார்.

அப்போது மேடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் என் மீது அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல்நிலையத்தில் நான் உட்பட பல்வேறு நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.

தற்போது இந்த வழக்கில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த குற்ற பத்திரிக்கையில் நான் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு கீழமை நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

எனவே இந்த வழக்கில் காவல்துறையினர் என் மீது கைது நடவடிக்கையில் எடுக்காமல் இருப்பதற்காக முன் ஜாமின் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் நான் பின்பற்றுவேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, எச் ராஜா நீதிமன்றத்தையும் காவல் துறையினரையும் அவதூறாக பேசியுள்ளார் எனக்கூறி, வழக்கை தள்ளுப்படி செய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad