ஆபாச பட வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் அதிரடி கைது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

ஆபாச பட வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் அதிரடி கைது!

ஆபாச பட வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் அதிரடி கைது!


ஆபாச படங்களை தயாரித்த வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தமிழில், மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர், தொழிலதிபர் ராஜ் குந்த்ரா. இவர் பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர். இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை, ஆபாச படங்களை தயாரித்த வழக்கில், இன்றிரவு மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இது குறித்து மும்பை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, மும்பையில் ஆபாச படங்களைத் தயாரித்து, அவற்றை சில மொபைல் போன் ஆப்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அதற்கான அனைத்து ஆதாரங்களும் காவல் துறையிடம் உள்ளன.ராஜ் குந்த்ரா மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதால், அவரை கைது செய்துள்ளோம். மேலும் இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad