அமைதி காப்பது ஏன்? தமிழக அரசுக்கு சீமான் கேள்வி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

அமைதி காப்பது ஏன்? தமிழக அரசுக்கு சீமான் கேள்வி!

அமைதி காப்பது ஏன்? தமிழக அரசுக்கு சீமான் கேள்வி!

தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே பிரமாண்ட அணை கட்டியுள்ள கர்நாடக அரசு மீது, சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்காமல் தமிழக அரசு அமைதி காப்பது ஏன்? என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்

இது குறித்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
தென் பெண்ணை ஆற்றின் துணை ஆறான மார்க்கண்டேய நதியின் குறுக்கே தடுப்பணை என்ற பெயரில் மதகுகளின்றி மிகப்பெரிய அணையைக் கட்டி முடித்துள்ள கர்நாடக அரசுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையையும் எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது.

தடுப்பணை அமைப்புக்குச் சிறிதும் தொடர்பில்லாத வகையில் 162 அடி உயரத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வெளியேறாதபடி மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட அணையால் வட தமிழகமே பாலைவனமாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் தமிழக அரசு அமைதி சாதிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் யார்கோள் என்னுமிடத்தில் மார்க்கண்டேய நதியின் குறுக்கே கடந்த 2014ம் ஆண்டு, தடுப்பணை கட்டத் தொடங்கியது கர்நாடக அரசு. பத்து ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த முந்தைய அ.தி.முக. அரசு, அது குறித்து பெரிதாகக் கவலை கொள்ளாது அலட்சியமாக விட்டதன் விளைவாகவே இன்றைக்கு நதிநீர் உரிமையே பறிப்போகிற இழிநிலையில் நிற்கிறோம்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்து இணக்கமாக இருந்த போதிலும் தமிழகத்திற்கான நதிநீர் உரிமையை நிலைநாட்ட சட்டப் போராட்டமும், அரசியல் நெருக்கடியும் கொடுக்காது வேடிக்கைப் பார்த்து நின்ற அ.தி.மு.க., அரசின் மோசமான செயல்பாடே இவ்வளவு கொடிய சூழலுக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.புதிதாக திமுக அரசு பொறுப்பேற்றப் பிறகும் கூட அதே நிலை நீடிக்கிறது. தமிழக நீர்வளத் துறை அமைச்சர் டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தென் பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டியது குறித்து எவ்விதக் கண்டனமோ, நடுவர் மன்றம் அமைப்பது குறித்து எவ்வித நடவடிக்கை இல்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது மட்டுமின்றி, தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியையும் வெளிக்காட்டுவதாய் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad