அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது?

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது?


ஜெயலலிதா இல்லாமல் சசிகலாவை ஓரங்கட்டி விட்டு, ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் கடந்த சட்டமன்றத் தேர்தலை அதிமுக சந்தித்தது. அதில் அக்கட்சி 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. வன்னியர் உள் இடஒதுக்கீட்டால் தென் மாவட்டங்களில் வாக்கு வங்கி சரிந்தது, அமமுக கனிசமான வாக்குகளை பிரித்தது, இரட்டை தலைமைக்குள் ஏற்பட்ட சலசலப்புகள், கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கியது, பாஜகவுடன் கூட்டணி, தேமுதிகவை கலட்டி விட்டது போன்ற பல்வேறு அம்சங்கள் அதிமுகவின் தோல்விக்கான காரணங்களாக கூறப்பட்டது.
இதனிடையே, சசிகலா வெளியிட்டு வரும் தொடர் ஆடியோக்களால் ஏற்பட்டுள்ள சிக்கல், எதிர்க்கட்சி தலைவர் தேர்வின் போது நடைபெற்ற மோதல்கள் என அதிமுகவுக்குள் குழப்பம் நீடித்து வருகிறது. அதேசமயம், பாஜக கூட்டணி குறித்து சிவி சண்முகத்தின் கருத்து கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் விரைவில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. அதில், அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதுகுறித்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், கட்சியினருக்குத் தக்க ஆலோசனைகளை வழங்கியதாகத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தமிழக அரசை வலியுறுத்துதல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தல், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


No comments:

Post a Comment

Post Top Ad