கொரோனா தடுப்பூசி: திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் - ஈபிஎஸ் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 17, 2021

கொரோனா தடுப்பூசி: திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் - ஈபிஎஸ்

கொரோனா தடுப்பூசி: திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் - ஈபிஎஸ்



''தமிழ் நாட்டிற்கு கடந்த இரண்டு மாதத்தில் எத்தனை லட்சம் தடுப்பூசிகள் தரப்பட்டது என்று திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்'' என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, '' கொரோனா நோய்த் தடுப்பூசியினை கண்டுபிடித்து, இந்தியாவில் அந்தத் தடுப்பூசியினை முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், பிறகு 60 வயது நிறைவடைந்த முதியோர்களுக்கும் என்று, படிப்படியாக கடைசியாக 40 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று எங்கள் அரசின் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு அறிவித்தது.

அப்போது, தமிழ் நாட்டில் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பின்விளைவுகள் ஏற்படும் என்று தமிழக மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தினர். எனவே, மக்களின் அச்சத்தைப் போக்க நானும், அரசில் இருந்த அமைச்சர்களும், அரசு மருத்துமனைகளில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு, தமிழக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.

எனினும் அன்றைய எதிர்க்கட்சியினர் பொதுமக்களிடையே எழுப்பிய அச்ச உணர்வினால் எதிர்பார்த்த அளவு தமிழ் நாட்டு மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை. அதிமுக அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பதிலும், தடுப்பூசி செலுத்துவதிலும், பாதிப்புகள் மற்றும் இறப்புகளைத் தெரிவிப்பதிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டது.



மேலும் தற்போது, ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக அதிமுக செயல்படுவதால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் அதிகளவில் முன்வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே உலகளாவிய டெண்டர் விடப்பட்டு, கொரோனா தடுப்பு மருந்து கொள்முதல் செய்யப்பட்டு தமிழ் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றது. பிறகு தமிழ் நாட்டில் செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பு நோய் மருந்து தயாரிப்பு மையத்தை மாநில அரசே ஏற்று நடத்தும் என்று அறிவித்தார்கள்


No comments:

Post a Comment

Post Top Ad