சரக்கு இலவசம்: ‘ரகிட ரகிட ரகிட ஊ’... மதுப்பிரியர்கள் ஹேப்பி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 8, 2021

சரக்கு இலவசம்: ‘ரகிட ரகிட ரகிட ஊ’... மதுப்பிரியர்கள் ஹேப்பி!

சரக்கு இலவசம்: ‘ரகிட ரகிட ரகிட ஊ’... மதுப்பிரியர்கள் ஹேப்பி!


கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளால் பார்கள் மற்றும் உணவகங்கள் ரெஸ்டரண்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மதுபான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில், இலவச மதுபானங்களை வழங்கவும், பெரிய அளவிலான தள்ளுபடிகளை வழங்கவும் தெலங்கானா அரசு அனுமதி வழங்கவுள்ளது.

அதன்படி, மக்கள் மதுக்கடைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையிலும் மதுபான விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், உரிமம் பெற்ற பார்களில் வழிமுறைகள் வக்குக்கப்பட்டு இலவசமாக மது வழங்கப்படும். மதுப்பிரியர்களை ஈர்க்கும் பொருட்டு, பீர், விஸ்கி, ஜின், ரம் என எந்த சரக்கு வகைகளை வேண்டுமானாலும் பார் நிர்வாகங்கள் இலவசமாக வழங்கிக் கொள்ளலாம்.

பார்களுக்கு வருகை புரியும் மதுப்பிரியர்களுக்கு இலவச சரக்கு வகைகள் மட்டுமல்லாமல் அதிக அளவிலான தள்ளுபடிகளும் வழங்கப்படவுள்ளன. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், இரண்டு பீர் வாங்கினால் சிக்கன் இலவசம் என்பன உள்ளிட்ட ஆஃபர்களும் வழங்கப்படவுள்ளன.


பிறந்த நாள், நண்பர்கள் மற்றும் குடும்பக் கொண்டாட்டங்களில் மதுபான விருந்துகளுக்கு சிறப்பு தள்ளுபடிகள் இந்த மாதத்திலிருந்து மதுபான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக மதுக்கடைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே பார் உரிமையாளர்களுடன் நடந்த அரசு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மதுபான விற்பனையை மேம்படுத்தவும், மதுபான வர்த்தகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக மதுவிலக்கு ஆயத்தீர்வை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அக்கூட்டத்தில், நுகர்வோர் முதலில் மதுக்கடைகளுக்குச் செல்ல ஊக்குவிக்கும் வகையில் இலவச மதுபானத் திட்டத்தைத் தொடங்க அதிகாரிகள் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தினர். நுகர்வோர் வருகை புரிய ஆரம்பித்ததும், மதுபான வியாபாரம் வளரும் மற்றும் மதுக்கடைகளில் இருந்து கிடைக்கும் வருவாய் மேம்படும் என்றும் இதன்மூலம், அரசாங்கமும் பார் நிர்வாகங்களும் நிதி சுமையில் இருந்து மீளலாம் என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது.



பார் நிர்வாகங்கள் தங்கள் நிதி நம்பகத்தன்மையைப் பொறுத்து இலவச மது வகைகளை வழங்க தயாராக உள்ளன என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad