இந்தியாவில் முதன்முதலாக கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டு தொற்று! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

இந்தியாவில் முதன்முதலாக கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டு தொற்று!

இந்தியாவில் முதன்முதலாக கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டு தொற்று!



உலகம் முழுவதும் கொரோனா கோரதாண்டவம் ஆடி வருகிறது. முதல் அலை முடிந்து இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என்று அடுத்தத அலைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். முன்னதாக, கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சீனாவின் வுஹானில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊரான கேரளா திரும்பிய மருத்துவ மாணவி ஒருவருக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரள மாநிலம் திரிசூரை சேர்ந்த இந்த பெண்ணுக்குத்தான் இந்தியாவில் முதன்முதலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இப்பெண்ணுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. படிப்பு விஷயமாக டெல்லி செல்வதாக இருந்த அப்பெண், சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு அறிகுறி இல்லாத தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவை பொறுத்தவரை கடந்த திங்கள் கிழமை மட்டும் 7,798 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் 9.14 ஆக உள்ளது. தொற்று எண்ணிக்கை குறையாவிட்டாலும், லாக்டவுன் கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்த முடியாது. இயல்பு நிலைக்கு அனைவரும் வர வேண்டும் என்பதால் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட 43 சதவீதம் பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். 12 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் போட்டுள்ளனர் என்றும் பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad