ராகுல் காந்தியுடன் பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு!
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான பணிகளை இப்போதே அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற முக்கிய பங்காற்றிய தேர்தல் உத்தியாளரான பிரஷாந்த் கிஷோர், தற்போது அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார்.
இந்த நிலையில், பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அடங்கிய மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பிரஷாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதுபற்றி “இந்தியா முழுவதும்: பி.கே. போடும் மாஸ்டர் ப்ளான்!” என்ற தலைப்பில் சமயம் தமிழில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளுடன் பிரஷாந்த் கிஷோர் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார். அந்த வகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை அண்மையில் சந்தித்த பி.கே., சுமார் 3 மணி நேரம் அவருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
No comments:
Post a Comment